search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலகம்"

    ஊத்தங்கரை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள கே.எட்டிப்பட்டி கூட்டுரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை கூரம்பட்டி கிராமத்திற்கு மாற்றப்படு வதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மண்எண்ணை கேனுடன் நேற்று கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு திரண்டு வந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை உள்ளே அடைத்து வைத்து அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஊத்தங்கரை தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைதொடர்ந்து அலுவலகத்தை திறந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் சாமல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து அலு வலகத்தில் வைத்து பூட்டியதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் (வயது23), கூனப்பட்டியை சேர்ந்த புருஷோத்தமன், மங்காவரத்தை சேர்ந்த பூபாலன், கே.எட்டிப்பட்டியை சேர்ந்த பாபு என்கிற பெருமாள், கூனப்பட்டியை சேர்ந்த பவானி, முரும்மாள், வெண்ணிலா, மீரா, அமுதா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    ×